ராஜபாளையம்: ராஜபாளையம் பெத்தவநல்லுார் மாயூரநாதசுவாமி கோயில் ஆனிப்பெருந்திருவிழா ஜூன் 29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. இதையொட்டி கோயிலை சுற்றிலும் தேர்பாதை சீரமைக்கப்பட்டிருந்தது. அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் செந்தில் வேலவன், செயல் அலுவலர் அறிவழகன் தக்கார் ராமராஜா செய்தனர்.