தசரதன் உயிர் பிரிந்த ஏழாம் நாளன்று தான், பரதன், தந்தையின் பிரேத உடலைக் கண்டான். தசரதனின் இறுதிச் சடங்கை முடிக்க பரதன் சரயு நதிக்கரைக்கு எடுத்து சென்றான். தசரதனின் ஈமச்சடங்கை சத்ருக்னன் முடித்து வைத்தான். தசரத மன்னரின் இதர தேவியர்கள் அறுபதினாயிரம் பேர், அந்த ஈமத்தீயில் இறங்கி மூழ்கி நற்கதி பெற்றார்கள். பரதன், இராமபிரானிடமிருந்து, பாதுகைகளைப் பெற்று நந்திக்ராமம் என்ற ஊரில் வைத்து வணங்கிச் செங்கோல் செலுத்தி வந்தான். சித்திர கூட மலையினை விட்டுக் கிளம்பின இராமலக்ஷ்மணர், சீதையைத் தேடிச் சென்ற வழியில் அத்திரி முனிவரைச் சந்தித்தனர். அதன் பிறகு, அவர்கள் மூவரும் தண்ட காவனம் என்ற இடத்தை அடைந்தனர். அந்த இடத்தில் கொடுவிசை அரக்கனான விராதன் வந்தான்.