பதிவு செய்த நாள்
13
ஜூலை
2017
01:07
புதுார்: குருவருள் திருவருளை பெற்றுத்தரும், என, மதுரை ராமகிருஷ்ண மடத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில் அதன் தலைவர் கமலாத்மானந்தர் பேசினார். அவர் பேசியதாவது: குருபூர்ணிமா வியாசர் அவதரித்த நாள் என்பதால் வியாச பூர்ணிமா, வியாசபூஜை என அழைக்கப்படுகிறது. வியாசர் வேதங்களை நான்காக வகுத்தார். மகாபாரதம், ஸ்ரீமத் பாகவதம், மகாபுராணங்கள், நுட்பமான ஆன்மிக தத்துவங்களை கூறும் பிரம்ம சூத்திரங்களை நமக்கு அருளியவர் அவர். குருவும், தெய்வமும் ஒரு பக்தனுக்கு இரண்டு கண்கள். ஆச்சார்யனை உடையவன் ஞானம் பெறுகிறான் என உபநிஷதம் கூறுகிறது. குரு என்பவர் அக்ஞானத்தை நீக்குபவர் என பொருள். சத்குருவின் அருளில்லாமல் ஒருவர் பிறவிக்கடலை கடக்க முடியாது, என்றார். முன்னதாக வேத பாராயணம், அஷ்டோத்தரசத நாம பாராயணம், சிறப்பு ேஹாமங்கள் நடந்தன.