ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரவிழா ஜூலை 19ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இக்கோயிலில் 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் முதல் நாள் காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. அதையடுத்து இரவு 16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருவீதி புறப்பாடு நடக்கிறது. ஐந்தாம் நாளான ஜூலை 23 காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் மங்களாசாசனம், இரவு 10 :00மணிக்கு ஐந்துகருடசேவை , 7 ம் நாளான ஜூலை 25 இரவு 7 :00மணிக்குல் கிருஷ்ணர்கோயிலில், ஆண்டாள் மடியில் ரெங்கமன்னார் சயனத்திருக்கோலம் நடக்கிறது.
தேரோட்டம்: விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூலை 27 காலை 8:05 மணிக்கு நடக்கிறது. பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து இழுப்பார்கள். ஏற்பாடுகளை தக்கார்ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜாசெய்து வருகின்றனர்.