பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
01:07
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., மேட்டு மருதூர் காளியம்மன் கோவில், உல்லிவிட்டான் சுவாமிகள் கோவில் விழாவையொட்டி நேற்று காலை, 9:00 மணியளவில் காவிரி ஆற்றில் இருந்து, பொது மக்கள் பால்குடம் எடுத்து, முக்கிய வீதிவழியாக வந்து காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். இரவு, 9:00 மணியளவில் கல்லுப்பாலத்தில் காளியம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, சுவாமிக்கு ஆட்டுக்குட்டி காவு கொடுத்தல், பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில், உடலில் அலகு குத்துதல், அக்கினிசட்டி எடுத்தல், இரவு மாவிளக்கு எடுத்தல் நடக்கிறது. நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.