பதிவு செய்த நாள்
27
ஜூலை
2017
01:07
திருவிடந்தை: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், ராகு, கேது பெயர்ச்சி பரிகாரத்திற்கு இன்று வழிபடலாம் என, ஆன்மீக அன்பர்கள் தெரிவிக்கின்றனர். மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 108 வைணவத் தலங்களில், 62ம் தலமாக, இக்கோவில் விளங்குகிறது. மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடனும், உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடனும், கோவிலில் வீற்று, பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர்.
இக்கோவில், திருமண தோஷ பரிகார தலம் என்பது ஒருபுறமிருக்க, ராகு, கேது பரிகார தலமாகவும் சிறப்பு வாய்ந்தது. ராகு, கேது பரிகார சுவாமி ஆதிசேஷன், மனைவியுடன், மூலவர் ஆதிவராகர் திருவடியை தாங்கியுள்ளார். தற்போது, கோவில் திருப்பணிகள் நடைபெறுவதால், உற்சவருக்கு மட்டுமே வழிபாடு நடக்கிறது.மூலவர் வழிபாடு இல்லையெனினும், ராகு, கேது பரிகார கோவில் என்பதால், ராகு, கேது பெயர்ச்சிக்கு விசேஷ நாளான இன்று, இங்கு வழிபடலாம் என, ஆன்மீக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.