பெருந்துறை: காஞ்சிக்கோவிலில், நேற்று, திருவிளக்கு பூஜை நடந்தது. பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில், சின்ன மாரியம்மன் கோவிலில், நேற்று மாலை திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், கலந்து கொண்டு, விளக்கு பூஜை செய்து, அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.