பதிவு செய்த நாள்
04
ஆக
2017
10:08
பழநி: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, பழநி மலை அடிவாரம் போகர் புலிப்பாணி ஆசிரமத்தில் ஓலைச்சுவடிகளுக்கு மலர் வழிபாடு நடந்தது. பழநி போகர் புலிப்பாணி ஆசிரமத்தில், பலநுாறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்களான போகர், புலிப்பாணி உள்ளிட்டோர் எழுதிய சித்த மருத்துவம், ஜோதிடம் உள்ளிட்ட குறிப்புகளை கொண்ட ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஆடிப்பெருக்கு நாளின் போது உலகஅமைதி, இயற்கைவளம் பெருக, போகர் சித்தர், ஓலைச்சுவடிகளுக்கு மலர் வழிபாடு நடக்கிறது. அதன்படி நேற்று கணபதிஹோமம், 18சித்தர்கள் ஹோமம், போகர் சித்தருக்கு அபிஷேகம் செய்து, ஓலைச்சுவடிகளுக்கு மலர் வழிபாடு நடந்தது. அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பிறமாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டவரும் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமி குழுவினர் செய்தனர்.