முத்துகிருஷ்ணாபுரம் கோவிலில் 27ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2011 11:11
நடுவீரப்பட்டு : பண்ருட்டி அடுத்த முத்துகிருஷ்ணாபுரம் செல்லமுத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் 27ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு நாளை 25ம் தேதி காலை 7 மணிக்கு வாஸ்து சாந்தி, கோ பூஜை, மகா கணபதி ஹோமம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ரக்ஷாபந்தனம், 7 மணிக்கு நவக்கிரக ஹோமமும், 9 மணிக்கு முதல் கால பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து 26ம் தேதி காலை 6 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 7 மணிக்கு 3ம் கால பூஜையும் நடக்கிறது. 27ம் தேதி காலை 4 மணிக்கு விக்ரகங்களுக்கு காப்பு கட்டுதலும், 4ம் கால யாகசாலை பூஜையும், 10.30 மணிக்கு கலசம் புறப்பட்டு ஆலய உலா வந்து 11 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.