வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஆடிப்பூர கஞ்சிக்கலச விழா நடந்தது. தொழிலதிபர் சுப்பிரமணியன், இந்திராணி தம்பதியர் ஆன்மிக கொடியேற்றி துவக்கினர். தொடர்ந்து வத்திராயிருப்பு மேலப்பாளையத்தில் அமைந்துள்ள வழிபாட்டு மன்றத்தில் யாகபூஜைகளுடன் 1008 கஞ்சிக் கலயம் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்ட வேள்விக்குழு செயலாளர் ராமசாமி வேள்வி பூஜையை துவக்கினார். பல்வேறு கிராமங்களிலிருந்தும் விரதமிருந்த பக்தர்களுக்கு கலயம் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின் ஊர்வலம் புறப்பட்டது. ஆன்மிக நிர்வாகக்குழு செயலாளர் பத்மநாபன் துவக்கி வைத்தார். அக்னிச்சட்டி, முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம், உடைகள் தானம் வழங்கப்பட்டது. கந்தசஷ்டி விழாக்குழு தலைவர் பக்தர்களுக்கு வழங்கினார். ஏற்பாடுகளை வழிபாட்டு மன்ற தலைவர் லதா, செயலாளர் பாண்டிச்செல்வி, பொருளாளர் ராஜேஸ்வரி, நிர்வாகிகள் செய்தனர்.