பதிவு செய்த நாள்
09
ஆக
2017
12:08
முதுகுளத்துார்: முதுகுளத்துார் வடக்குவாசல் செல்வியம்மன் கோயில் 41 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சங்கராண்டி ஊரணியில் முளைப்பாரி கரைக்கப்பட்டது. அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, கொடி இறக்கம், அம்மனுக்கு திருஷ்டி கழித்தலுடன் பூச்சொரிதல் விழா நிறைவடைந்தது. இரவில் கலைநிகழ்ச்சி நடந்தது.
*இதேபோல் கமுதி கருங்குளம் சந்தனமாரியம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா ஜூலை 27 ல் துவங்கி, பொங்கல் வைத்தல், திருவிளக்கு பூஜை, பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல், ஆயிரண் கண் பானை, கரும்பாலை தொட்டில் கட்டி நேர்த்தி கடன் செலுத்துதல், சிறப்பு அபிேஷகம், ஆராதனைகளுடன் நேற்று, முளைப்பாரி ஊர்வலம் நடந்து, மலட்டாற்றில் கரைக்கபட்டது.