மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. மயிலம் மலையடிவாரத்திலுள்ள சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு வழிபாடு நடந்தது. இதேபோல் கொல்லியங்குணம் விநாயகருக்கு காலை 7:00 மணிக்கு அபிஷேகம், மகா தீபாரதனை நடந்தது. கூட்டேரிப்பட்டு ரயில்வே-கேட் அருகில் உள்ள சுந்தரவிநாயகருக்கு, சந்தன காப்பு அலங்காரம், தீபாரதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஆலகிராமத்தில் எமதண்டீஸ்வரர் கோவில் வளாகத்திலுள்ள விநாயகருக்கு பால், பழத்தினால் அபிஷேகம் செய்தனர். மயிலம், கூட்டேரிப்பட்டு, செண்டூர், ரெட்டணை உள்ளிட்ட கிராமங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, கிராம மக்கள் வழிபட்டனர்.