பதிவு செய்த நாள்
28
ஆக
2017
12:08
நெய்குப்பி : நெய்குப்பியில், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. கல்பாக்கம் அடுத்த, நெய்குப்பியில், லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைக்க, சில ஆண்டுகளுக்கு முன் முடிவெடுக்கப்பட்டது. முதற்கட்டமாக, ஆஞ்சநேயர், கலிகர், வராகர், நரசிம்மர், கருடர் என, ஐந்து முகங்களுடன், 18 அடி உயர கான்கிரீட் சிலை அமைக்கப்பட்டது. அதன் கீழ் மூலவர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.காலை, 9:50 மணிக்கு, ஆஞ்சநேயர் சிலைக்கும், அடுத்து, மூலவர், உற்சவர்களுக்கும், புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அணுபுரம் சுற்றுப்புற பகுதியினர் பங்கேற்று, மூலவரை தரிசித்தனர். இரவு, சுவாமி வீதியுலா சென்றார்.