பதிவு செய்த நாள்
01
செப்
2017
02:09
கூவத்துார்; திருவாலீஸ்வரர் கோவில் திருப்பணிகளை, இணை ஆணையர் அசோக்குமார் ஆய்வு செய்தார்.கூவத்துாரில், திரிபுரசுந்தரி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ், மாமல்லபுரம் ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளை நிர்வாக சார்பு கோவிலாக, இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.சுவாமி, அம்பாள், விநாயகர், முருகர், தனித்தனி சன்னதிகளில் வீற்றுள்ள பழமையான இக்கோவில், 79 ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் சீரழிந்தது. இதை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த முடிவெடுத்து, கூவத்துாரைச் சேர்ந்த, சென்னை தொழில் அதிபர் கோதண்டராமன் தலைமையில் திருப்பணி குழு அமைக்கப்பட்டது.புனரமைப்பு பணிகளுக்கு, திருக்கோவில் ஆணையர் பொது நிதியில், 14.20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.குழு தலைவர் உள்ளிட்டோர் நன்கொடை மூலம், தற்போது கோவில் புனரமைக்கப்பட்டு, இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. கோவில் குளமும் துார்வாரி புதுப்பிக்கப்பட்டது. செப்., 10ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இணை ஆணையர் அசோக்குமார், நேற்று முன்தினம், கோவிலில் ஆய்வு செய்து, எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.