பதிவு செய்த நாள்
02
செப்
2017
12:09
திருப்பதி: ஜனாதிபதியாக பதவியேற்ற பின், ராம்நாத் கோவிந்த், முதல்முறையாக, நேற்று ஆந்திராவிற்கு வந்தார். தனி விமானம் மூலம் திருப்பதி விமான நிலையத்தை அடைந்த அவரை, ஆந்திர கவர்னர், நரசிம்மன், முதல்வர், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் மலர் செண்டு அளித்து வரவேற்றனர். பின், திருச்சானுார் சென்று, பத்மாவதி தாயாரை, ஜனாதிபதி வழிபட்டார். திருப்பதியில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், ஆந்திர அரசு சார்பில் அளிக்கப்பட்ட விருந்தில் பங்கேற்றார். இன்று காலை, திருப்பதி, ஏழுமலையானை, ஜனாதிபதி தரிசிக்க உள்ளார்.