வால்பாறை: வால்பாறை பள்ளி மற்றும் கலைக்கல்லுாரியில் மாணவிகள், ஓணம் பண்டிகையை ஒட்டி அத்தப்பூ கோலமிட்டு அசத்தினர். வால்பாறையில், ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை கலைசெல்வி தலைமையில் மாணவிகள் அத்தப்பூக் கோலமிட்டு அசத்தினர். அதே போன்று, வால்பாறை பாரதியார் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த விழாவுக்கு கல்லுாரி முதல்வர் ரமேஷ் தலைமை வகித்தார். கல்லுாரி மாணவர்கள் அத்தப்பூ கோலமிட்டு அனைவரையும் அசத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லுாரி உதவி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.