செந்துறை முத்தாலம்மன் விழா: பக்தர்கள் கழுமரம் ஏற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09செப் 2017 10:09
செந்துறை: செந்துறை அருகே நடந்த முத்தாலம்மன் திருவிழவை முன்னிட்டு கழுமரம் ஏற்றம் நடந்தது. செந்துறை சுற்றுப்பகுதியில் பதினெட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் சார்பில் 45 ஆண்டுகளுக்கு பின் முடிமலை ஆண்டவர், பெரியூர்பட்டி பெரியமுத்தாலம்மன், செந்துறை முத்தாலம்மன், போடிக்கம்பட்டி முத்தாலம்மன், மல்லநாயக்கன்பட்டி சின்ன முத்தாலம்மன், கழுவடியான், கருப்பசாமி சுவாமிகளின் விழா கொண்டாடப்பட்டது. கடந்த ஆக.23 அன்று காப்பு கட்டுதல், பிடிமண் எடுத்து முடிமலை ஆண்டவர் கோயில் வீடு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. செப்., 6 அன்று இரவு கோவில்பட்டியில் இருந்து 4 அம்மன்களுக்கும் கண் திறப்பையடுத்து, சுவாமி புறப்பாடு நடந்தது. மறுநாள் காலை மாவிளக்கு எடுத்து, பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை பெரியூர்பட்டி பெரிய முத்தாலம்மன் கோயில் முன்பு கழுமர ஏற்றம் நடந்தது. தொடர்ந்து நான்கு அம்மன் கோயில்களில் இருந்து படுகளம் மற்றும் பாரிவேட்டை நடந்தது. மாலையில் அந்தந்த கோயில்களில் இருந்து அம்மன்கள் பூஞ்சோலை சென்றடைந்தனர்.