Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனந்தம் இன்று ஆரம்பம் சொல்கிறார் ... எங்கும் நிறைந்த கண்ணன் எங்கும் நிறைந்த கண்ணன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிறந்தால்.... திருப்பதியில் பிறக்கணும்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிறந்தால்.... திருப்பதியில் பிறக்கணும்!

பதிவு செய்த நாள்

11 செப்
2017
03:09

அடுத்த பிறவியில எப்படி பிறக்கணும்? என்ற ஆசை நம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கவே செய்யும். பெரும்பாலும், பணக்காரனா பிறந்து ராஜா போல வாழணும் என ஆசைப்படுவோம். ஆனால், ராஜாவாகப் பிறந்த குலசேகராழ்வார் தன் விருப்பத்தை திருவேங்கடம் குறித்த பாசுரத்தில் சொல்வதைப் பாருங்கள். முதல் பாடலில் திருப்பதியிலுள்ள குளத்தில் நாரையாகப் பிறக்க வேண்டும் என பெருமாளிடம் வேண்டுகிறார்.  நாரை, இரை தேடி திருப்பதியை விட்டு வேறு எங்காவது சென்று விடுமே  என்பதால், அடுத்த பாடலில் மீனாக, பிறவி தர வேண்டுகிறார். ஏனென்றால் மீன் குளத்தை விட்டு வெளியே போகாது அல்லவா?

அதுவும் மாறி விடுகிறது. யாராவது மீனைப் பிடித்து விட்டால் என்ன செய்வது என யோசனை உண்டாகிறது. பின்னர் தன் மனம் போல ஒவ்வொரு பாடலிலும் ஒரு ஆசையை வெளிப்படுத்துகிறார். ஏழுமலையானுக்கு ஏவல் புரியும் பணியாளாகவும், மலைத் தோட்டத்தில் செண்பக மரமாகவும், மலையில் புதராகவும், மலைப்பாறையாகவும், காட்டாறாகப் பாயவும், கோவிந்தா நாமம் பாடி, அடியார்கள் ஏறிச் செல்லும், மலைப்பாதையாக இருக்கவும் விரும்புகிறார்.  ஏழுமலையானை எப்போதும் தரிசிக்கும் நோக்கத்தில் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே என்றும் வேண்டுகிறார். கடைசிப் பாடலில், திருவேங்கடப் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே என்று பெருமாளின் மனசு போல மலையில் ஏதாவது ஒன்றாகப் பிறந்தால் போதும் என்று முடிக்கிறார். புரட்டாசி சனி விரத நாளில் நாமும் பெருமாளிடம் விரும்பிய வரம் கேட்டுப் பெறுவோம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அவசியம் தான். முச்சந்தியில் எடுத்த காலடி மண், வற்றல் மிளகாயால் தலையை மூன்று முறை சுற்றி விட்டு ... மேலும்
 
மணநாளன்று தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நல்ல நாளில் செல்லுங்கள்.   ‘அவனுக்கு என்ன... கொடுத்து ... மேலும்
 
மூலவரின் நிழல் கீழே விழாமல் தடுக்க தீபமேற்றுவர். ஏனெனில் சுவாமியின் நிழலை மிதிக்க கூடாது.      ... மேலும்
 
அறியாமை, ஆணவத்தை கைவிட்டு நல்ல குணத்தை பின்பற்ற வேண்டும் என்பதுதான்.  அம்மன் ஒரு காலை மடக்கியபடி ... மேலும்
 

உஷ்... ரகசியம் அக்டோபர் 12,2026

* செய்த தர்மத்தை வெளியில் சொல்லாதீர்கள். அது ரகசியம்.  * தேனாக இருந்தாலும் அதிகம் சாப்பிட்டால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar