Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுதர்சனன் பொருள் என்ன? சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டமம் என்றால் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
மகாளயபட்சத்தின் சிறப்பு!
எழுத்தின் அளவு:
மகாளயபட்சத்தின் சிறப்பு!

பதிவு செய்த நாள்

11 செப்
2017
05:09

முன்னோர்கள் தம் வழிகாட்டிகள், அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் அவர்கள் கூறிய வழிமுறைகளின்படி நமது வாழ்க்கை அமைந்தது. அவர்களின் இறப்புக்குப் பின்னரும் ஆத்ம ரூபமாக நம்மை செம்மைப்படுத்துகின்றனர். அவ்வகையில் காக்கும் தெய்வமாக இருக்கும் நம் பித்ருக்களுக்கு மரியாதை செய்யும் காலம் மஹாளயபட்சம் (செப்டம்பர் 6ல் தொடக்கம்) ஆகும். அமாவாசை, சிரார்த்தம் போன்ற நாட்களில் நாம் கொடுக்கும் திதியை ஏற்க பித்ரு லோகத்திலிருந்து நம் முன்னோர் காகம் வடிவில் வந்து உணவை ஏற்பதாக ஐதீகம்.

நாம் தர்ப்பணம் செய்கையில் ஆட்காட்டி விரலுக்கும், சுக்கிர விரலான கட்டை விரலுக்கும் இடையே சுக்கிர ரேகைகள் வழியாக கீழே விழும் தர்ப்பண நீரின் சக்தி பூமியின் ஆகர்ஷண சக்தியை மீறி மேல் நோக்கி பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு லோகத்தை சென்றடைகிறது.

புரட்டாசி மாதம் பவுர்ணமி முடிந்து, அடுத்து தொடங்கும் தேய்பிறையான பிரதமை திதி முதல், அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்களும் முன்னோர்களுக்கு உகந்த நாட்கள், இந்நாட்களை மஹாளயபட்சம் என்று குறிப்பிடுகிறோம். மஹாளயம் என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து வந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மஹாளய பட்சம்.

இறைவனிடத்தில் இளைப்பாறும் மறைந்த நம் பித்ருக்கள் நினைத்தபோதெல்லாம் பூலோகத்துக்கு வர அனுமதிக்கப்படுவதில்லை. பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் பூவுலகில் முன்னோர்களுக்கு அவர்களின் சந்ததியினர் அளிக்கும் தர்ப்பணம் நேரடியாக அவர்களுக்குச் செல்வதில்லை. எமதர்மராஜனின் கைகளுக்குச் சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து ஒப்படைப்பாராம். ஆனால், மஹாளய பட்சமான பதினைந்து நாட்கள் மட்டும் விதிவிலக்கு. மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்துக்குச் சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே? எனவே மஹாளய பட்ச நாட்களில் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

இந்நாட்களில் பூலோகத்தில் வசிக்கும் அவர்களுக்கு பசியும், தாகமும் மிக அதிகமாக இருக்குமாம். ஆகவே பிரதமை திதி முதல் அமாவாசை வரை நாம் அளிக்கும் தர்ப்பணம் அவர்களின் பசியைப் போக்கி ஆத்ம திருப்தி அளிக்கிறது. முன்னோர்களின் ஆசி கிடைத்த பின்னர்தான் அம்பாளே நம் வீட்டிற்குள் வருகிறாள் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான், மஹாளய பட்சம் முடிந்த கையோடு நவராத்திரி பண்டிகை தொடங்குகிறது. அந்த வகையில் பித்ரு, பூஜையின் மகிமையை என்னவென்று கூறுவது? ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என சிவனும், விஷ்ணுவும் கூறியதாக சாஸ்திரம் சொல்கிறது. பித்ருக்களின் அன்பிற்கு பின்னர்தான் கடவுளின் அருட்பாவையே நம்மீது படர்கிறது.

தர்ப்பண காரியங்கள் செய்யும் ஆண்களுக்குத் துணையாக பெண்கள் உதவி புரிய வேண்டும். முழு மனதோடு பெண்கள் ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் அக்காரியம் முழுமை பெறுகிறது. இதனோடு பித்ருக்களின் வாழ்த்துக்குப் பின் மகரிஷிகள், சித்தர்கள், தேவர்கள் ஆசியும் கைகூடும். இந்த பதினைந்து நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களுக்கு ஒரு நாளாவது சென்று நீராடி திதி கொடுக்க வேண்டும். முடியாதவர்கள் காகத்துக்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம். ஸ்ரீமந் நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. மஹாளய பட்ச சமயத்தில் தானிய வகைகள், கரும்பு, அன்னம், பழம் போன்றவைகளை தங்களால் இயன்ற வரையிலும் தானம் செய்திடல் வேண்டும். கோயில் வாசலில் அன்னதானம் செய்வது அதனினும் சிறப்பு.

பித்ருக்கள் எங்கிருந்தாலும் தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள் அளவும் சந்தேகம் கிடையாது. அவர்களுக்கான மரியாதையை நாமும் சரியாகச் செய்வோம்.

தர்ப்பணம், சிரார்த்தம் பற்றிய மேலும் சில தகவல்கள்

பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன் தினம் வரை தனது வீட்டில் தெய்வங்களுக்குத் தினசரி செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது. தர்ப்பணம் செய்யும் நபர் அந்த மாதத்தில் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், கோயில் நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் - ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஒரு வருடத்தில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொண்ணூற்று ஆறு! அவை 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப் பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள் ஆகியவை, இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள். இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டிய நாள்தான்.

முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிரார்த்தத்துக்கு பார்வண சிரார்த்தம் என்று பெயர். ஹோமம், பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிரார்த்தம், சங்கல்ப சிரார்த்தம் எனப்படும். ஒருவருக்குச் சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி, காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும், சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிரார்த்தம், ஆம சிரார்த்தம் எனப்படும். சிரார்த்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது, ஹிரண்ய சிராத்தம் எனப்படும். சிரார்த்தம் நடத்தப்படும் இடம், நேரம், சிரார்த்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிரார்த்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிரார்த்தம் செய்யும் நபர் ஆகியவை தூய்மையான வையாக இருந்தால் சிரார்த்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு - அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும். பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப் பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு, பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். பெற்றோர்களின் வருஷாந்தர சிரார்த்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதி தர்ப்பணங்கள் செய்து விட்டு, பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

தாய் தந்தை இருவருக்கும் ஆண்டுதோறும் செய்யும் சிரார்த்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்குச் சிரார்த்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும். பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத் தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டு விட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ, அன்று பிராயச்சித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும். நமக்காக எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கிய நம் பித்ருக்களுக்கு, நாம் செய்யும் நன்றிக்கடனாக, மஹாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் மேற்கண்ட செயல்களை முழுமனதோடு செய்வதோடு மட்டுமல்லாமல், அன்றைய நாட்களில் வெங்காயம், பூண்டு போன்றவற்றை உணவில் தவிர்க்க வேண்டும்.

மஹாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்

1ம் நாள் : பிரதமை - பணம் சேரும்
2ம் நாள் : துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்.
3ம் நாள் : திரிதியை - நினைத்து நிறைவேறுதல்.
4ம் நாள் : சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்.
5ம் நாள் : பஞ்சமி - செல்வம் சேரும்
6ம் நாள் : சஷ்டி - புகழ் கிடைத்தல்.
7ம் நாள் : சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் : அஷ்டமி - அறிவாற்றல் கிடைத்தல்.
9ம் நாள் : நவமி - திருமண தடை நீங்கும்.
10ம் நாள்: தசமி - நீண்டநாள் ஆசை நிறைவேறுதல்.
11ம் நாள்: ஏகாதசி - படிப்பு, கலையில் வளர்ச்சி.
12ம் நாள்: துவாதசி - ஆபரண சேர்க்கை உண்டாகும்.
13ம் நாள்: திரயோதசி - ஆயுள், ஆரோக்கியம், அபிவிருத்தி.
14ம் நாள்: சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும்.
15ம் நாள்: மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேரும். ஏனென்றால் பதினைந்து நாட்கள் நம்முடன் அரூபமாக இருந்து வந்த நம் முன்னோர், நமக்கு ஆசி வழங்கி விட்டு, பித்ருலோகம் திரும்பும் நாள்!

 
மேலும் துளிகள் »
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar