மயிலாடுதுறை ஸ்ரீ அமர்ந்தாளம்மன் கோயில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் தரிசனம்.
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2017 06:09
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடியில் பிரசித்தி பெற்ற துர்க்கை யம்மனின் அவதாரமான ஸ்ரீ அமர்ந்தாளம்மான் கோயில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோயிலின் திரு ப்பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கடந்த 13ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, நேற்று நான்காம் கால பூஜைகள் முடிந்து பூர்ணாஹூதி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விமான த்தை அடைந்ததும், வேத மந்திரம் ஓத, சிவாச்சாரியார் விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடைத்தி வைத்தார். அதனையடுத்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.