கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2017 11:09
மதுரை: மதுரை கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளின் குருபூஜை விழா இன்று (செப்.,26) நடக்கிறது. இதை முன்னிட்டு திருப்பரங்குன்றம் திருகூடல்மலை சூட்டுக்கோல் ராமலிங்க விலாசத்தில் காலை 8:00 மணி யாகசாலை பூஜை, காலை 10:30 மணி அபிஷேகம், சிறப்பு வழிபாடு, மாலை 6:00 மணி திருவிளக்கு பூஜை, இரவு 8:00 மணி பூப்பல்லக்கு நடக்கிறது. இரவு 8:15 மணி வலங்கைமான் கே.தியாகராஜன் குருப்பிரியா லயவித்யாலயா இசை குழுவினரின் பக்தி இன்னிசை, இரவு 10:00 மணி நாடக நடிகர் சங்கம், பக்தர்கள் சார்பில் பக்தி மனோகரி பக்தி புராண நாடகம் நடக்கிறது. ஏற்பாடுகளை கட்டிக்குளம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.