முத்தங்கி சேவையில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2017 04:09
திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, முத்தங்கி சேவையில் கனகவல்லி தாயாருடன் சுவாமி அருள்பாலித்தார்.
திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், நவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. வீரராகவ பெருமாள், கனகவல்லி தாயாருடன், தினமும், வெவ்வேறு அலங்காரத்தில், உள்புறப்பாடு வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இன்று (செப்.26ல்) கனகவல்லி தாயார், உற்சவர் வீரராகவ பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.