உடுமலை : உடுமலை கோயில்களில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். விழாவை முன்னிட்டு, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி ஆறாம் நாள் விழாவில், அம்மன் சட்டு சத்ஸ் காளிதேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தில்லை நகர் ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், அம்மன் காய்கறி, கனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.