புத்து மாரியம்மன் கோவிலில் சக்ரமகா மேரு பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2011 11:12
கடலூர் : கடலூர் புத்து மாரியம்மன் கோவிலில் சக்ரமகா மேரு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடலூர், மஞ்சக்குப்பம் புத்து மாரியம்மன் கோவிலில் சக்ரமகா மேரு பிரதிஷ்டை செய்ததையொட்டி நேற்று காலை அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, அக்னி சம்ஹாரம், மூலமந்திர ஹோமம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சுவர்ணாம்பிகை சமேத சரபேஸ்வரமூர்த்தி சுவாமிக்கு 108 சங்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. வரும் 11ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பத்து காலங்களாக பிரித்து ஏகதின லட்சார்சனை நடந்தது.