பதிவு செய்த நாள்
05
அக்
2017
11:10
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், குதிரை வாகனத்திற்கு, காஞ்சிபுரம் நுால் வியாபாரிகள் மகமை சார்பில், வெள்ளி கவசம் பொருத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், உத்திர திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடத்தப்படுகிறது. இதில், 8ம் நாள், இரவு, காஞ்சிபுரம் நுால் வியாபாரிகள் மகமை சங்கம் சார்பில், குதிரை வாகன உற்சவம் நடத்தப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்டுள்ள குதிரை வாகனத்திற்கு வெள்ளி கவசம் பொருத்த, காஞ்சிபுரம் நுால் வியாபாரிகள் மகமை சங்கத்தினர் முடிவு செய்து, நன்கொடையாளர்கள் மற்றும் பக்தர்கள் உதவியுடன், வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு, கோவில் நிர்வாகத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது. இனி, பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவில், ஏகாம்பரநாதர், வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.