தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2017 11:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் வருடத்திற்கு நடராஜருக்கு வருடத்திற்கு ஆறு முறை அபிஷேகம் நடைபெறும். சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்தசி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும். இதில் நேற்று புரட்டாசி மாத வளர்பிறை சதுர்தசி திதியில், கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள நடராஜருக்கு பால், சந்தன அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.