மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05அக் 2017 11:10
மதுரை: மதுரையில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மதுரையில் முக்கிய பகுதிகளான பெரியார், சிம்மக்கல், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. கோயில் முழுவதும் மழை நீர் புகுந்ததால் பக்தர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணி நடக்கிறது.