பதிவு செய்த நாள்
06
அக்
2017
12:10
ஸ்ரீபெரும்புதுார் : ராமானுஜர் மற்றும் எம்பார் திருமஞ்சன தீர்த்தம் மருத்துவ குணம் கொண்டதால், திருமஞ்சனம் நடைபெறும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.ஸ்ரீபெரும்புதுார், ராமானுஜர் அவதரித்த ஊர். ராமானுஜர் வாழ்ந்த காலத்திலேயே அவரது சீடர்களால், அவரது உருவம் தாங்கிய செப்பு விக்ரகத்தை உருவாக்கினர்.இது தானுகந்த திருமேனி என அழைக்கப்படுகிறது.
இந்த செப்பு விக்ரகம் ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் பிரதிஷ்டைசெய்யப்பட்டு பல நுாறு வருடங்களாக வழிபாடு செய்யப்படுகின்றன. ராமானுஜர் திருவாதிரை நட்சத்திரத்தன்று அவதரித்தவர். திருவாதிரைஇதனால், மாதந்தோறும் வரும் திருவாதிரை திருநட்சத்திரத்தன்றும், ஆழ்வார்கள் மற்றும் ஆச்சாரியர்களின் திருநட்சத்திரத்தன்றும், சித்திரை அவதாரத் திருநாட்கள் பத்து நாட்கள் உள்ளிட்ட ஆண்டில் மிக விசேஷமான நாட்களில், ராமானுஜருக்கு, திருமஞ்சனம் நடத்தப்படுகிறது.அந்த சமயத்தில் ராமானுஜரின் திருமேனியில் பசும்பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் போன்ற பொருட்களால் ராமானுஜருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.அதன் பின், ராமானுஜர் திருமேனியில் சாற்றப்படும் ஆடையைபிழிந்து, தீர்த்தம் எடுக்கப்படும். இது, ஈரவாடை தீர்த்தம் எனப் போற்றப்படுகிறது.இந்த தீர்த்தம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருமஞ்சன தீர்த்தத்தை பக்தர்கள் பருகுவதால் பல விதமான சரும நோய்களும், தோஷங்களும் விலகுவதாக நம்பப்படுகிறது.எனவே, மாதம் தோறும் நடைபெறும் திருவாதிரை திருமஞ்சனத்தின் போது ஏராளமான பக்தர்கள் கலந்து, பயனடைகிறனர்.அதுபோல, சுங்குவார்சத்திரம் அடுத்த மதுரமங்கலத்தில், ஸ்ரீவைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.
புனர்பூசம்அது, ராமனுஜரின் சிற்றன்னையின் மகன், ஸ்ரீஎம்பார் அவதரித்து, வழிபட்ட தலம். புனர்பூசம் நட்சத்திரத்தன்று, ஸ்ரீ எம்பார் அவதரித்தவர்.இதனால், மாதந்தோறும் வரும் பூனர்பூசம் நட்சத்திரத்தன்று, ஸ்ரீஎம்பாருக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது. பசும்பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவை, திருமஞ்சனம் செய்து முடிக்கப்பட்ட பின், எம்பார்ருக்கு அணிவிக்கப்பட்ட ஆடையை பிழிந்து, கிடைக்கும் தீர்த்தம், பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தை பருகுவதால், கண் சார்ந்த நோய்கள் குணமடைவதாக நம்பப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட திருமஞ்சன தீர்த்தத்தை பருகவும், எம்பாரை வழிபடவும், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.