திண்டுக்கல் வழித்துணை மாரியம்மன் கோயிலில் புரட்டாசி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2017 05:10
திண்டுக்கல்: திண்டுக்கல், அங்குநகர் வழித்துணை மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு பூச்சட்டி ஏந்தியும், பூக்குழி இறங்கியும் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.