Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: எதிர்பாராத வருமானம் கும்பம்: கையில் பணப்புழக்கம் கும்பம்: கையில் பணப்புழக்கம்
முதல் பக்கம் » பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை)
மகரம்: சிறப்பான வளர்ச்சி
எழுத்தின் அளவு:
மகரம்: சிறப்பான வளர்ச்சி

பதிவு செய்த நாள்

16 அக்
2017
02:10

மனசாட்சியை மதித்து நடக்கும் மகர ராசி அன்பர்களே!

புதன் அக்.28-ல் இடம் மாறினாலும் சாதகமாக காணப்படுகிறார். சுக்கிரன் நவ.3-ல் இருந்து சாதக இடத்திற்கு வருகிறார். சூரியன், சனி மாதம் முழுவதும் சிறப்பான வளர்ச்சி தர காத்திருக்கின்றனர். நினைத்தது நிறைவேறும். குடும்பத் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். சமூகத்தில் மதிப்பு உயரும். சனி பகவானால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் உறுதுணையாக செயல்படுவர்.

குடும்பத்தில் புதனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர வசதி பெருகும். கையில் பணப்புழக்கம் கூடும். அக்.27,28,29-ல் சகோதர வழியில் உதவி கிடைக்கும். விருந்து, விழாவிற்கும் குடும்பத்தோடு புனித தலங்களுக்கும் சென்று வருவீர்கள்.

அக்.22,23,24-ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். நவ.3,4-ல் அவர்களின் வகையில் வீண் விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் உடல்நலக்குறைவு ஏற்படலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். பங்கு வர்த்தகம் மூலம் அமோக லாபம் கிடைக்கும். அக்.27-க்கு பிறகு புதிய தொழில் முயற்சி வெற்றி பெறும். சந்திரனால் அக்.22,23,24ல் பண விரயம் ஏற்படலாம். நவ.7,8,9-ல் அதிர்ஷ்டவசமாக வருமானம் வர வாய்ப்புண்டு. பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும். ராகுவால் அவ்வப்போது அலைச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. சிலருக்கு வெளியூரில் தங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.

பணியாளர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்.27க்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறும். கடந்த காலத்தில் இருந்த வேலைப்பளு குறையும். அக்.20,21, நவ.16- ஆகிய நாட்கள் சிறப்பான நாட்களாக அமையும்.கலைஞர்கள் சிறப்பான நிலையை காணலாம். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். நவ.2க்கு பிறகு எதிரியால் பிரச்னை ஏற்படலாம் கவனம்.

அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். மக்கள் மத்தியில் நற்பெயர் உண்டாகும். நவ.5,6-ல் மனக்குழப்பம் ஏற்பட்டு மறையும். மாணவர்களுக்கு புதனால் சிறப்பான வளர்ச்சி காத்திருக்கிறது. படிப்பில் அக்கறை நாளுக்கு நாள் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணை நிற்கும். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர்.

விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்க பெறலாம். எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரத்தில் முடிவு சுமாராகவே இருக்கும்.

பெண்கள் வாழ்வில் மகிழ்ச்சி மேலோங்கும். அண்டை வீட்டார் அனுகூலமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதி, திருப்தி உண்டாகும். தொழில்புரியும் பெண்கள் புதனால் அமோக லாபம் காண்பர். நவ.1,2- ஆகிய நாட்கள் சிறப்பானதாக இருக்கும். ஆடை, ஆபரணம் சேர வாய்ப்புண்டு. நவ.10,11-ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

* நல்ல நாள்: அக்.20, 21, 22, 23, 24, 27, 28, 29,  நவ.1, 2, 7, 8, 9, 10, 11, 16
* கவன நாள்: நவ.12, 13-   சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்:1,9
* நிறம்: பச்சை, கருநீலம்

* பரிகாரம்:
●  திங்களன்று சிவனுக்கு அர்ச்சனை
●  தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
●  சனியன்று சனீஸ்வரருக்கு எள் தீபம்

 
மேலும் பங்குனி ராசி பலன் (15.3.2026 முதல் 13.4.2026 வரை) »
temple news
மேஷம்அசுவினி: வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்ந்து, அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்துவரும் உங்களுக்கு, ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்: நினைத்ததை சாதிப்பதில் முதன்மையானவரான உங்களுக்கு, பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்எந்த ஒன்றிலும் உறுதியாக இருந்து செயல்பட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்சிந்தித்து செயல்படுவதுடன் மற்றவர்களை வழிநடத்தும் திறமையும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
மகம்விடா முயற்சியுடன் தொடர்ந்து எதிர்நீச்சல் போட்டுவரும் உங்களுக்கும் பிறக்கும் பங்குனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar