பதிவு செய்த நாள்
26
அக்
2017
12:10
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்வேறு முருகன் கோவில்களில், கந்த சஷ்டி விழாவையொட்டி, நேற்று காலை, மஹா அபிஷேகம், லட்சார்ச்சனை, சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. காஞ்சிபுரம் குமரகோட்டத்தில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடந்தது. சுவாமி பல்லக்கில் வீதியுலா சென்று, ஏகாம்பரநாதர் கோவில் குளத்தில், தீர்த்தவாரி நடந்தது. உற்சவர் சண்முகப்பெருமான் மலர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 2:00 மணிக்கு, யாகசாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, 4:00 மணி வரை, லட்சார்ச்சனை நடந்தது. பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், கோவில் பிரகாரத்தை, 108 முறை வலம் வந்த பக்தர்கள், சிரமத்துடன் சென்றனர்.
காஞ்சிபுரம் நெமந்தகாரத்தெரு, பழநி ஆண்டவர் கோவிலில், மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செங்கல்பட்டு செங்கல்பட்டில், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பின், கந்தசஷ்டி விழா, 23ம் தேதி துவங்கி, தினமும், லட்சார்ச்சனை விழா நடந்தது. நேற்று காலை, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதுபோல, காட்டு நாயக்கன் வீதி, செம்மலை ஸ்ரீ வேல்முருகன், அருள் ஞான பீடம் மலைக்கோவிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று, லட்சார்ச்சனை விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டில், வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பின், கந்தசஷ்டி விழா, 23ம் தேதி துவங்கி, தினமும், லட்சார்ச்சனை விழா நடந்தது. நேற்று காலை, சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதுபோல, காட்டு நாயக்கன் வீதி, செம்மலை ஸ்ரீ வேல்முருகன், அருள் ஞான பீடம் மலைக்கோவிலில், கந்தசஷ்டி விழாவையொட்டி, நேற்று, லட்சார்ச்சனை விழா நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்ரமணியசுவாமி கோவிலில், 35ம் ஆண்டு கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 3:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் தாழக்கோவிலாக பக்தவச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. கந்தசஷ்டி விழா, 20ல், துவங்கியது. இங்குள்ள ஆறுமுக சுவாமிக்கு தினசரி அபிஷேகம் நடந்து வந்தது. நேற்று மகா அபிஷேகம், விசேஷ தீப ஆராதனை நடந்தது. பக்தர்கள் மலர் அர்ச்சனை செய்தும், தீபம் ஏற்றியும் வழிபட்டனர். திருக்கழுக்குன்றம், காணக்கோவில்பேட்டை, வரசக்தி விநாயகர் கோவில், முருகப்பெருமான் வள்ளி தெய்வானை, வீரவாகு தேவர்களுடன் புடை சூழ, வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.