பதிவு செய்த நாள்
09
நவ
2017
01:11
ராசிபுரம்: ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில் திருவிழா, தேர் உற்சவம் இன்று நடக்கிறது. ராசிபுரம், நித்ய சுமங்கலி மாரியம்மன் கோவில், ஐப்பசி மாத திருவிழா, அக்., 24ல் துவங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், கொடியேற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று, அக்னி குண்டம் பற்ற வைத்தல், இன்று அதிகாலை, அக்னி குண்டம் பிரவேசித்தல் நடக்கிறது. மாலை, திருத்தேர் உற்சவம் நடக்க உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தேர்முட்டியில் இருக்கும் தேரை, மக்கள் ஒன்றுகூடி இழுத்து வந்து, கடை வீதியில் நிறுத்துகின்றனர். நாளை, அண்ணாசாலை வழியாக, மீண்டும், தேர்முட்டியில் நிறுத்துகின்றனர். இதையடுத்து, உடற்கூறு வண்டி வேடிக்கை, வரும், 11ல், புஷ்ப பல்லக்கில் அம்மன் பவனி, நையாண்டி மேளத்துடன் சத்தாபரணம், 12ல், வசந்தோற்சவம், விடையாற்றி கட்டளை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.