பதிவு செய்த நாள்
20
நவ
2017
01:11
புதுச்சேரி: சத்ய சாய்பாபாவின், 92வது பிறந்த நாள் விழா, புதுச்சேரியில் நேற்று கொண்டாடப்பட்டது. சத்ய சாய்பாபாவின் 92ம் ஆண்டு பிறந்த நாள் விழா, கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி சத்ய சாய் சேவா சமிதி சார்பில், லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சத்ய சாய்பாபாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, சத்திய சாய் மாவட்ட தலைவர் நரசிம்மன் தலைமை தாங்கினார். வேத பாராயணம், சாய் பஜனையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பாலவிகாஸ் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆன்மிக கலை நிகழ்ச்சி கள் நடந்தன. இரவு 8:00 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது. விழாவில், புதுச்சேரியை சேர்ந்த எட்டு கல்வி நிறுவனங்களில் முதல்வர் கள், தாளாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். கன்வீனர் சிவதாசன் நன்றி கூறினார்.