புதுகை மாவட்ட சிவன் கோவிலில் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2011 12:12
புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமிக் கோவில் உட்பட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் நேற்று கார்த்திகை மாத கடைசி சோமவரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜை நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் ஒன்று ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில். இங்கு சிவபெருமான் மாணிக்க வாசகராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு கார்த்திகை மாத கடைசி சோமாவரம் என்பதால் நேற்று அதிகாலை முதலே சங்காபிஷேகம், லட்சார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, நாகை, திருவாரூர், ராமனாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசித்தனர். சங்காபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகிகள் செய்திருந்தனர். இதுபோன்று திருவேங்கைவாசல் வியாகபுரீஸ்வர் திருக்கோவில், திருக்கோகர்ணம் கோகர்ணேஸ்வரர் திருக்கோவில், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி திருக்கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள முக்கிய சிவன் கோவில்களில் நேற்று சங்காபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது.