பதிவு செய்த நாள்
02
டிச
2017
12:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏற்றப்பட உள்ள, மஹா தீபத்தை காண, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், தீப திருவிழாவில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து, 40 கி.மீ.,க்கு தெரியும் மஹா தீபத்தை காண, கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். இவர்கள் மழையை கண்டு கொள்ளாமல், கிரிவலம் சென்றவாறு உள்ளனர். கோவில் வளாகம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.