திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் பாலசுப்பிரமணியன் நகரில் ஸ்ரீபால கணபதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இரண்டு கால யாகசாலை பூஜைகள் முடிந்து, விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு மகா அபிஷேகம் முடிந்து சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்தனர். மேலுார்: அரிட்டாபட்டி பதஞ்சலிபுரத்தில் உள்ள சித்தர் ராமத்தேவர் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது. நவ.,29 ல் விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜை துவங்கியது. டிச.,1ல் நான்காம் கால யாகசாலை பூஜையை தொடர்ந்து, கும்பாபிேஷகம் நடந்தது. இதில் அரிட்டாபட்டி, மேலுார், அழகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தோர் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது.