புதுச்சேரி : புதுச்சேரி வெள்ளாழ வீதியில் உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில், சண்முக வேலாயுத சுவாமிக்கு குருபூஜை நிகழ்ச்சி நடந்தது. குருபூஜை நிகழ்ச்சியையொட்டி, மனக்குள விநாயகர் கோவில் இருந்து தங்கத்தேர் வரவழைக்கப்பட்டு, நந்திகேஸ்வரர் கோவில் வாயிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து தங்கத்தேர் வீதியுலாவாக மனக்குள விநாயகர் கோவிலுக்கு சென்றது. குருபூஜை நிகழ்ச்சியில், ஆர்ஷ வித்யா பீடம் நிறுவனர் ததேவானந்த சுவாமிகள், தத்வ போதானந்த சுவாமிகள், சபாநாயகர் வைத்திலிங்கம், முன்னாள் நீதிபதி முருகபூபதி, சந்தானம், நாடு சண்முக வேலாயுத அறக்கட்டளை தலைவர் சவுந்திரவள்ளி, பொருளாளர் திவான் ராசப்பா ஆகியோர் கலந்து கொண்டனர்.