பதிவு செய்த நாள்
20
டிச
2017
11:12
விருதுநகர்: விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில், ராமர் கோயில், என்.ஜி.ஓ., காலனி வழிவிடு விநாயகர்கோயிலில் நேற்று சனிப்பெயர்ச்சி வழிபாடு நடந்தது. சிறப்பு ஹோமம், அபிேஷகம் மற்றும் வழிபாடு நடந்தன. சனிபகவான், நவக்கிரஹங்கள் உள்ள கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசிவிஸ்வநாதர் கோயிலில் பூரண கும்பம் வைத்து வழிபாடு நடந்தது. பின்னர் சனீஸ்வரருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட கும்பநீரால் அபிஷேகம், சிறப்பு பூஜைகளும் நடந்தது. சுற்றுப்புற கிராம பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பக்தசபா நிர்வாகிகள் கதிரேசன், வெங்கடேசன், முல்லைக்கொடி, கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர்ராஜ் ஏற்பாடுகளை செய்தனர்.
சாத்துார்: சாத்துார் சிதம்பரேஸ்வரர் கோயில், கீழச்சத்திரம் காசிவிஸ்வநாதர் கோயில், நென்மேனி கைலாசநாதர் கோயில்களில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் குவியத்தொடங்கினர். மூலவர்சுவாமிக்கும், சனிஸ்வரனுக்கும் சிறப்பு பூஜைகள், நடந்தது. கோயில்களில் உள்ள விநாயகர், முருகன், பெருமாள்சுவாமி, ஆஞ்சநேயர்சுவாமிக்கும், அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வைத்தியநாதசுவாமி கோயிலில் நடந்த சனிபெயர்ச்சி சிறப்பு வழிபாட்டில் ஏரதளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று காலை 9:59 மணிக்கு சனிபகவான் கேட்டை நட்சத்திரம் விருச்சிக ராசியிலிருந்து மூலநட்சத்திரம் தனுசு ராசிக்கு பெயர்ச்சியடைந்ததை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு ஸ்ரீசனிபகவானுக்கு கும்பம் வைத்து , விசேஷ அபிேஷகத்தை ரகுபட்டர் நடத்தினார். 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சனிபகவானை தரிசித்தனர். 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குடும்பத்தினர் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்தனர். மாலை சன்னதி திறக்கப்பட இரவு வரை பல்வேறு நகரங்களிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை தக்கார் நடராஜன், செயல் அலுவலர் நாராயணி செய்திருந்தனர்.
சிவகாசி: சிவகாசி சிவன் கோயிலில் சனிபகவானுக்கு சிறப்பு பூஜைகளும், அபிேஷகம் நடந்தன. சுப்பிரமணி பட்டர் பூஜை ஏற்பாடுகளை செய்தார். இதுபோல் சிவகாசி இந்து நாடார்கள் பலசர க்குவர்த்தக மகமை பண்டுக்கு பாத்தியப்பட்ட முருகன் கோயிலில் யாக பூஜைகளுடன் சனிப்பெயர்சி விழா கொண்டாடப்பட்டது. சிவகாசி பேச்சியம்மன் கோயிலில் சிறப்பு பரிகார பூஜைகள் நடந்தன.