பதிவு செய்த நாள்
25
டிச
2017
11:12
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பின் பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருளினர்.கொடி மரத்தடியில், அட்ஷராயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பன்னிரு திருமுறை வழிபாடும், காலை, 8.30 மணிக்கு, உற்சவக்கொடி ஏற்றப் பட்டு, மகா தீபாராதனையும் நடந்தது. ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர். ஆருத்ரா விழாவில், சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு, தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகளும், காலையில், பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், மாலையில், சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. வரும், 28ம் தேதி, தெருவடைச்சான் உற்சவமும், ஜனவரி, 1ல் தேரோட்டமும், 2ல், ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.