பதிவு செய்த நாள்
26
டிச
2017
11:12
பழநி ; விடுமுறையையொட்டி முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்ததால் வின்ச், ரோப்கார், 2மணிநேரமும், 3 மணிநேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
சபரிமலை சீசன், மார்கழியை முன்னிட்டு, பழநி மலைக் கோயிலுக்கு வெளியூர் ஐயப்ப, பாதயாத்திரை, காவடிக்குழு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று பொது விடுமுறை தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவே பக்தர்கள் குவிந்ததால் கோயில் தங்கும் விடுதிகள், தனியார் லாட்ஜ்கள் நிரம்பியது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப்கார் வின்ச் ஸ்டேஷன்களில் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். பொதுதரிசன வழியில் 3மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.