ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவம்: மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2017 11:12
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளில், மோகினி அலங்காரத்தில், நம்பெருமாள் மூலஸ்தானத்தில், இருந்து அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா, டிசம்பர், 18ல் திருநெடுந்தாண்டகம் நிகழ்வுடன் துவங்கி நடைபெற்றுவருகிறது. விழாவின் பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளில், மோகினி அலங்காரத்தில், நம்பெருமாள் மூலஸ்தானத்தில், இருந்து அர்ச்சுன மண்டபத்துக்கு எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.