பதிவு செய்த நாள்
06
ஜன
2018
11:01
குமாரபாளையம்: பல்லக்காபாளையம், செங்கமாமுனியப்பன் கோவில் திருவிழாவில், இன்று பொங்கல் சிறப்பு வழிபாடு நடக்கிறது. குமாரபாளையம் அருகே, பல்லக்கா பாளையம் செங்கமாமுனியப்பன் கோவில் திருவிழா, டிச., 25ல் துவங்கியது. நேற்று முன்தினம், உற்சவருக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் பெரும்பூஜை நடந்தது. நேற்று இரவு, காவிரி ஆற்றிலிருந்து, தீர்த்தக்குடங்கள் மேள தாளங்கள் முழங்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் முனியப்பசுவாமி எழுந்தருளி அருள்பாலித்தவாறு வர, ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இன்று, பொங்கல் சிறப்பு வழிபாடு, நாளை, மஞ்சள் நீராட்டு வைபவம் நடக்கவுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, உருவ பொம்மைகளை வாங்கி, சுவாமி முன் வைத்து வழிபட்டனர். ஏராளமான கடைகள், சாலையின் இருபுறமும் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு வருபவர்கள், பிரசாதத்துடன் கரும்பும் வாங்கி செல்வது வழக்கம். ஆகவே, அதிக அளவிலான கரும்புகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தன.