சிவ பக்தர்களுக்குரிய அடையாளங்கள் ஐந்து; அவை, ருத்திராட்சம், விபூதி, வில்வம், நமசிவாய எனப்படும் ஐந்தெழுத்து மந்திரம் மற்றும் ஸ்படிக ரூபமான சிவலிங்கம் ஆகியன. சிவராத்திரி அன்று தேகத்தை பசு மரத்தால் (விபூதி) பரிசுத்தம் செய்து, கழுத்தில் ருத்திராட்சம் அணிந்து வில்வத்தை கையில் எடுத்து, நமசிவாய என்று சொல்லி, சிவலிங்க ரூபத்தை தியானித்து, வழிபட வேண்டும்.