பதிவு செய்த நாள்
10
ஜன
2018
11:01
ஆர்.கே.பேட்டை : செவ்வாய்க்கிழமையை ஒட்டி, கங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தின் மேற்கு பகுதியில், ஓடைக்கரையில் அமைந்துள்ளது கங்கையம்மன் கோவில். நித்திய பூஜைகளுடன், வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று, செவ்வாய்க்கிழமையை ஒட்டி, காலை, 10:00 மணிக்கு அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து, மகா தீபாராதனை செய்யப்பட்டது. மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த கங்கையம்மனை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.