காரைக்கால் : காரைக்கால் சவுந்தராம்பாள் ஒப்பில்லா மணி யன் கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு, நந்திகேஸ்வரருக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. காரைக்கால் வாஞ்சூர் காஞ்சி சங்கர மடத்திற்கு சொந்தமான விசாலாட்சி அம்பாள் சமேத விச்வனாத சுவாமி கோவிலில் மாட்டு பொங்கலை முன்னிட்டு, கோவில் கோ சாலையிலுள்ள பசுக்கள் மற்றும் பாரம்பரிய காளைகளுக்கு கோலட்சுமி பூஜை நடந்தது. மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் கோவிலை சுற்றி காளை மாடு வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது. மேலும், காரைக்கால் வடமறைக்காட்டில் சவுந்தராம்பாள் சமேத ஒப்பில்லா மணியன் கோவி லில், மாட்டு பொங்கலை முன்னிட்டு மாலை நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளாமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.