நாகராஜாகோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2018 01:01
நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜாகோவில் தைத்திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நாகரை மூலவராக கொண்டது நாகர்கோவில் நாகராஜாகோவில். இங்கு மூலஸ்தானம் இன்னும் ஓலைக்கூரையில்தான் உள்ளது. இங்கு தை திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருச்சூர் பாம்பு மேக்கோடு இல்லம் ஸ்ரீதரன்நம்பூதிரி கொடியேற்றினார். பிப்ரவரி, 1 வரை, 10 நாட்கள் இந்த விழா நடக்கிறது. தினமும் காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 31- காலை, 7:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மறுநாள் மதியம், 11:00 மணிக்கு ஆயில்ய பூஜையும், மாலை, 5:30 மணிக்கு ஆராட்டும் நடக்கிறது.