அருணாசலேஸ்வரர் கோயிலில் 3 நாட்கள் அமர்வு தரிசனம் ரத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜன 2018 02:01
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோயிலில் வரும், 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அமர்வு தரிசனம் இல்லை. இது குறித்து, கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:குடியரசு தினத்தன்று அரசு விடுமுறை என்பதாலும், அதை தொடர்ந்து வரும், 27, 28, ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால், பல்வேறு பகுதிகளிலிருந்து கூடுதலாக பக்தர்கள் வருவர். எனவே, அருணாசலேஸ்வரர் கோயிலில் அமர்வு தரிசனம் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.