பதிவு செய்த நாள்
24
ஜன
2018
03:01
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத்திருவிழா 6ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்ச்சியில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது.
கோயிலில் ஜன.,18ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய தெப்பத்திருவிழாவில் தினம் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிக்கிறார். நேற்று வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை, மற்றொரு வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடாகி 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர். பல்லக்கில் திருஞான சம்பந்தரும் எழுந்தருளினார். அங்கு கோயில் ஓதுவாரால், சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை பாடல்கள் பாடப்பட்டன.இன்று (ஜன., 24) காலை கங்காள நாதர், இரவு நடராஜர், சிவகாமி அம்மன் புறப்பாடும், நாளை மாலை பச்சைக்குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.ஜன.,26ல் தைக்கார்த்திகை, தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி, தேரோட்டமும், ஜன., 27ல் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.