பழநி: பழநி முருகன் கோயிலில், ரோப் கார்’ நாளை (ஜன.,25ல்) ஒருநாள் பராமரிப்பு பணிக்களுக்காக நிறுத்தப்படுகிறது. பழநி மலைக்கோயிலுக்கு மூன்று நிமிடங்களில் செல்லும் வகையில் தினந்தோறும் ’ரோப்கார்’ காலை 7:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயக்கப்படுகிறது. இதுமாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை ஒருநாள் நிறுத்தப்படுகிறது. ’ரோப்கார்’ வடம், உருளை, பல் சக்கரங்கள் உள்ளிட்ட அனைத்து பாகங்களும் ஆய்வுசெய்து, கம்பிவடம், பல்சக்கரங்கள், உருளையில் ஆயில், கிரீஸ் இடப்பட்டு, பெட்டிகளில் குறிப்பிட்ட அளவு கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும்.பின், ஜன.,26ல் வழக்கம்போல் ரோப்கார் இயக்கப்படும் என இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.