பதிவு செய்த நாள்
24
ஜன
2018
03:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில், பெருமாள் சுவாமிக்கு கல்யாண உற்சவம் நடந்தது. கிருஷ்ணகிரி, பழையபேட்டையில், 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் புதிதாக கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் காலை நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் பெருமாள் சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். டி.ஆர்.ஓ., சாந்தி, டி.எஸ்.பி., கண்ணன் உட்பட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.